வர்ணக் கனவுகள்

Sunday, May 14, 2006

எனது டைரி - 10/3/2060

தேதி: 10 மார்ச் 2060

நமது முன்னாள் இந்திய ஜனாதிபதி, டாக்டர் அப்துல் கலாமின் கனவுகள் காலம் தாண்டியிருந்தாலும் சாதிக்கப்படிருந்தன. 2020ம் வருடத்தில் நிறைவேறவேண்டும் என்று அவர் நினைத்தது கிட்டத்தட்ட 50 வருடங்கள் தாண்டினாலும் நிறைவேறிவிட்டது. அவருடைய கனவுகள் தீப்பொறியாக பலரது நினைவுகளில் இருந்து, அவர் காலம் முடிந்தபின்கூட அவரது வழி நடப்பவர்கள் மூலமாக, அடுத்து வளர்ந்து வந்த இளைய தலைமுறைக்கு பரப்பப்பட்டு நனவுகளாக்கப்பட்டிருந்தது.

இன்றைய இந்திய புள்ளிவிபரங்களின்படி,

மக்கள்தொகை சுமார் முன்று மில்லியன்,

ஊழல் 40%க்கும் கீழ்,
வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் (மாதத்திற்கு ரூபாய் 20000 க்கும் கீழ் பெறுபவர்கள்) 30% க்கு கீழ்,
படித்தவர்கள் 100%,
வேலையில்லாதவர்கள் சதவிகிதம் 10% ஆக இருந்தது.

இதைவிட இரண்டு பெரிய சாதனை என்னவென்றால், முக்கியமாக ஜாதியின் அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது இல்லை. எல்லாரும் ஒன்றே, யாரும் ஓட்டப்பந்தயத்தில் இணையலாம், சிறந்தவர்கள் வெற்றிபெறுவார்கள்.

இரண்டாவது, அரசியல் கல்லூரி. ஒருவர் அரசியல் வாதி ஆக வேண்டுமென்றால், இந்த கல்லூரியில் பயின்று தேர்வு பெற வேண்டும், அவருடைய மதிப்பெண், அவருடைய செயல்கள், வாங்கிய ஓட்டுகள் அவற்றின் தகுதிப்படி, அவர்களுக்கு தகுந்த இடம் அரசியலில் தரப்படுகிறது. இந்த படிப்பிற்கு கட்டணம் கிடையாது, ஆனால், நுழைவுத்தேர்வு மற்றும் பல துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் குழு வின் நேர்முகக்காணல் படியே சீட் தரப்படுகிறது

இந்த இரண்டு மாற்றம், நம் நாட்டின் தலையெழுத்தையே மாற்றிவிட்டது.

நாளைக்கு, ஒரு முக்கியமான நாள். அது, 2060 தேர்தல். நான் முதல் முதலாக ஓட்டுப்போட்ட எலக்சன் பற்றி விபரங்கள் ஞாபகம் வருது. அன்று தேதி 8 மே 2006. அந்த எலக்ஷனை நினைத்தால் இப்பவும் சிறிப்பாக வருகிறது. அந்த எலக்சனில் ஒவ்வொரு கட்சியும் மக்களை தனக்கு ஓட்டுப்போடச் செய்ய என்னென்னாவெல்லாமோ அறிக்கை விட்டார்கள், கலர்டிவி, கேஸ் ஸ்டவ், போன்ற பல பொருட்களை இலவசமாகத் தருவதாகக் கூறினார்கள்.மற்றொரு கட்சி பத்துகிலோ அரிசி, தங்கச் சங்கிலி போன்ற பொருட்களையும், இன்னொருவர் வீடே கட்டித்தருகிறேன் என்றும் சொன்னார்கள். இந்த மாதிரி அறிக்கை விட்டால் நாடு எப்படி முன்னேறும், ஆனாலும் வேறு வழியில்லாமல் இவர்களுக்குத்தான் ஓட்டுப் போட வேண்டியிருந்தது.

ஆனால், இன்று அதுபோல் எந்த அறிக்கையும், எந்த கட்சியும் கொடுக்கவில்லை. அறிக்கையே இல்லையென்பதில்லை, ஆனால் அந்த காலத்தைவிட ரொம்ப மாறுபட்ட அறிக்கை.இன்றைய எல்லா கட்சிகளின் அறிக்கையும் ஒரே நோக்கத்தைச் சார்ந்தவை. அதாவது, நமது இந்தியாவை மேலும் வல்லரசாக ஆக்க அந்த கட்சி ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்யும் என்பதும், நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை எப்படி உயர்த்துவது என்பதும் மட்டும்தான்.

இன்றைய மக்களின் சிந்தனையும் அதுவே. எந்த கட்சிக்கு ஓட்டுப்போட்டால் உலக வங்கியிடம் வாங்கியுள்ள மீதமிருக்கும் கடனை தீர்க்க முடியும், எந்த கட்சிக்கு ஓட்டுப் போட்டால் எங்கள் இந்தியா உலகத்தின் மிகச் சிறந்த வல்லரசு என்ற சிகரத்தை அடையும்.

நம்ம நாடு இவ்வளவு முன்னேற்றம் அடையும் என்று கனவு காண வைத்த டாக்டர். அப்துல் கலாமை தெய்வம் போல பலர் மதிக்கிறார்கள். அதில் நானும் ஒன்று. அதையும் விட, அந்த கனவை நிறைவேற்ற மிகவும் பாடுபட்ட - அன்றையிலிருந்து இன்றுவரை - எங்கள் நாட்டின் இளைஞர்களுக்கு என் சல்யூட்.-------------
தேன்கூடு போட்டிக்காக

3 Comments:

 • At 5:50 AM, Anonymous Anonymous said…

  Good Try

   
 • At 10:35 AM, Anonymous Anonymous said…

  // இதைவிட இரண்டு பெரிய சாதனை என்னவென்றால், முக்கியமாக ஜாதியின் அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது இல்லை. எல்லாரும் ஒன்றே, யாரும் ஓட்டப்பந்தயத்தில் இணையலாம், சிறந்தவர்கள் வெற்றிபெறுவார்கள்.

  இரண்டாவது, அரசியல் கல்லூரி //

  இவை இரண்டும் கனவுதானே ? :-)))

  // எந்த கட்சிக்கு ஓட்டுப்போட்டால் உலக வங்கியிடம் வாங்கியுள்ள மீதமிருக்கும் கடனை தீர்க்க முடியும், //

  இந்தக் கடன்களுக்குத் தள்ளுபடி கிடையாதா ? :-))

   
 • At 6:33 AM, Blogger KVR said…

  //இந்த இரண்டு மாற்றம், நம் நாட்டின் தலையெழுத்தையே மாற்றிவிட்டது.//

  ஜாதி அடிப்படை மாறி வேறு விதமான ஒதுக்கீடுகள் வந்திருக்கலாம், ஆனால் எதாவது ஒரு ஒதுக்கீடு இருந்துகொண்டு தான் இருக்கும்.

  அரசியல் கல்லூரிகள்!!!

  //ஆனால், நுழைவுத்தேர்வு மற்றும் பல துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் குழு வின் நேர்முகக்காணல் படியே சீட் தரப்படுகிறது//

  இதிலே ஏதும் ஊழல் இருக்காது தானே??

  நல்ல கனா, நிறைவேற வாழ்த்துகள். வெற்றிப் பெறவும் :-).

   

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home